தமிழ் சினிமாவின் புரட்சிகர இயக்குநரும் பா.ரஞ்சித் அவர்களின் சிஷியருமான இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற தனது முதல் படத்திலேயே திரையுலக ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் .
இதை தொடர்ந்து குளோபல் ஸ்டார் தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் தாறுமாறான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் ,கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு , பா.ரஞ்சித் ,மாரி செல்வராஜ்,கமல்ஹாசன் ,சிவகார்த்திகேயன் ,கவின் ,விக்னேஷ் சிவன்,விழாவின் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர் .
ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருப்பதாகவும் அதில் ஏஆர் ரகுமான் ஒரு பாடலையும், அவரது மகன் ஏஆர் அமீன் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் விவரங்கள் இதோ..
கொடி பறக்குற காலம் : பாடகர்கள் – கல்பனா ராகவேந்தர், ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ், அபர்ணா ஹரிகுமார்.
நெஞ்சமே நெஞ்சமே: பாடகர்கள் – விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன்.
உச்சந்தல: பாடகர்கள்: தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பகவத்லா, பவித்ரா சாரி.
மன்னா மாமன்னா: பாடகர் – அறிவு.
வீரனே: பாடகர்: ஏஆர் அமீன்.
ராசாக்கண்ணு: பாடகர்: வடிவேலு.
ஜிகு ஜிகு ரயில்: பாடகர்: ஏ.ஆர்.ரகுமான்.
கோலாகலமாக நடைபெற்று முடிந்த மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் Audio Jukebox வெளியிடப்பட்டுள்ளது.
இதோ கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க…