இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி ( Upendra Dwivedi ) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுநாள் வரை இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்து வந்த மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் ஜூன் 30இல் முடிய உள்ளதால் தற்போது புதிய தலைமை தளபதியாக உபேந்திர திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read : சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியீடு..!!
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நீடித்த அவரது நீண்ட மற்றும் புகழ்பெற்ற சேவையில், பல்வேறு கட்டளை, பணியாளர்கள், பயிற்றுவிப்பு மற்றும் வெளிநாட்டு நியமனங்களில் பணியாற்றியுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியின் கட்டளை நியமனங்களில் ரெஜிமென்ட் (18 ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்), ( Upendra Dwivedi ) பிரிகேட் (26 பிரிவு அசாம் ரைபிள்ஸ்), டிஐஜி, அசாம் ரைபிள்ஸ் (கிழக்கு) மற்றும் 9 கார்ப்ஸ் ஆகியவை அடங்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.