அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டின் கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில்(US Senate )நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் ஏற்படுத்திய தாக்கம்:
யுக்ரைன் – ரஷ்யா போரால் உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்யின் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை என அனைத்தும் அங்கு கடுமையாக உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டிவிகிதத்தை உயர்த்தியதால் முதலீட்டு சந்தையைும் அங்கு வீழ்ச்சி அடைந்தது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் மைனஸில் சென்றதால் அமெரிக்க பொருளாதாரம்
கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.
திவாலாகும் சூழ்நிலையில் அமெரிக்க பொருளாதாரம்:
அந்நாட்டின் அதிகபட்ச கடன் வரம்புக்கு இணையாக தற்போது கடன் வாங்கப்பட்டுள்ளது.இனி கூடுதலாக கடன்வாங்கி செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவின் கடன் வாங்கும் உச்சவரம்பை அதிகரிக்கும் மசோத கொண்டு வரப்பட்டுள்ளது.
இருக்கட்சி மசோதா தாக்கல்:
பொருளாதார நெருக்கடி என்பதால் இந்த மசோதாவை குடியரசுக் கட்சியும் இணைந்து இருகட்சி மசோதாவாக கொண்டு வந்துள்ளன.
கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதா தொடர்பாக அதிபர் ஜோ பைடன் மற்றும் சபாநாயகர் கெவின் மேக்கார்த்தி இடையே உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இருதரப்பிலும், பெரும்பாலான உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
செனட் சபையின் ஒப்புதல் அவசியம்:
இதனை தொடர்ந்து இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த மசோதாவுக்கு ஜூன் 5-ஆம் தேதிக்குள் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.