இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், உத்ரகாண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைகழகத்திற்கு அவரது பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு, குன்னூர் பகுதியில் நடந்த எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா மற்றும் உடன் பயணித்த ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பிபின் ராவத் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில், உத்ரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை கூடிய போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி முதல் நாள் அவையை ஒத்தி வைத்தனர். இரண்டாவது நாள் அவையில், தேவ்பிராயக்கின் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கந்தாரி, பிபின் ராவத் பெயரை சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில், பிபின் ராவத் பெயரை உத்ரகாண்ட் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு சூட்ட சட்டப்பேரவையில் அனைவராலும் முன்மொழியப்பட்டது.
இதனைதொடர்ந்து, பிபின் ராவத் பெயரை தேவ்பிரயாக்கில் கட்டப்பட்டு வரும் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.