உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
தொழிலாளர்களை மீட்கும் பணி குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் சையது அடா ஹஸ்னைன் விளக்கம் அளித்துள்ளார்.
◾️ தேசிய பேரிடர் மீட்புப் படை மட்டுமின்றி ராணுவம், விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
◾️ தொழிலாளர்களை மீட்பதற்காக 58 மீட்டர் வரை துளையிடும் பணி முடிந்துள்ளது. இன்னும் 2 மீட்டர்கள் மட்டுமே மீதமுள்ளன.
◾️ ஒருவர் வெளியேற 3ல் இருந்து 5 நிமிடங்கள் வரை ஆகும். 41 பேரும் வெளியேற 3 – 4 மணி நேரங்கள் ஆகலாம்.
◾️ மீட்புப் பணி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது
◾️ சுரங்கப் பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக 400 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது
◾️ தொழிலாளர்களின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன