இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் – அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம்!

vaccine-for-pregnant-ladies
vaccine for pregnant ladies

நாட்டிலேயே கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வாரந்தோறும் மெகா  தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இதுவரை 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் 15 முதல் 18 வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

இதற்கிடையில் நாட்டிலேயே கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

vaccine-for-pregnant-ladies
vaccine for pregnant ladies

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் என அவர் தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், மேலும் வரும் 10-ம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் பேசினார்.

சுகாதார துறை பணியாளர்கள், ஊழியர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கி பூஸ்டர் டோஸ் போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts