ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று 50வது நாளில் வெற்றிகரமாகா அடியெடுத்து வைத்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் வடிவேலு உருக்கமாக பேசியிருப்பது பலரையும் மெய்சிலிற்க வைத்துள்ளது .
இக்கால தலைமுறைகளுக்கு அதிகம் தேவை படும் தீண்டாமையை ஒழிப்பை மையமாக கொண்டு மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நவரச நாயகி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்க்கிடையே திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது :
“நான் நடிச்ச மொத்த படத்துல, இந்த ஒத்த படம்தான் எனக்கு பேரு வாங்கி கொடுத்திருக்கு”
இந்த கதையை ஓகே பண்ண வைத்தது உதயநிதி தான்; இந்த வெற்றியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை; எனக்கு படத்தில் 6 காட்சிகள் பிடித்தது. அவை அனைத்தும் என்னை தூங்க விடவில்லை.
30, 40 வருடத்திற்கு முன் உள்ள பெரிய இயக்குநர்கள் செய்ய எடுக்கக்கூடிய படம் தான் மாமன்னன். இது போன்று படங்களை தொடர்ந்து எடுத்து உடம்பை கெடுத்து கொள்ளாமல், நகைச்சுவை படமும் மாரி செல்வராஜ் எடுக்க வேண்டும் .
ரொம்ப சந்தோசமான நாள் இன்று; திருவிழா மாதிரி உள்ளது. 500 திரையரங்குகளில் படம் ஒருநாள் ஓடினால் 500 நாள் என்றாகிவிடும் எத்தனையோ கதாபாத்திரங்கள் நடித்துள்ளேன். நகைச்சுவை படங்கள் நடித்துள்ளேன். இந்த படம் தான் எனக்கு பேர் வாங்கி கொடுத்து உள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார் .