வலிமை டீசர் ‘சம்பவம் தரமாக இருக்கும்’ வினோத் கொடுத்த அப்டேட்!

Thala Ajith’s Valimai Teaser From Thursday

மிகவும் எதிர்பார்க்கப்படும் தல அஜீத்தின் வலிமை திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வந்த “வலிமை” திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதிரடி ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ரிலீஸ்க்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Thala Ajith’s Valimai Teaser From Thursday
Thala Ajith’s Valimai Teaser From Thursday

வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். நேற்று நடிகர் கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தில் அவரின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

மேலும் இந்த படத்தில் யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், என ஒரு நட்சத்திர பாடலாமே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

ஏற்கனவே வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி, ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் வலிமை படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில்,  வலிமை டீசர் குறித்து இப்படத்தின் இயக்குனர் வினோத் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ‘சம்பவம் தரமாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கிடைத்த தகவலின் படி, வலிமை படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.

Total
0
Shares
Related Posts