மிகவும் எதிர்பார்க்கப்படும் தல அஜீத்தின் வலிமை திரைப்படம் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வந்த “வலிமை” திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதிரடி ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ரிலீஸ்க்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். நேற்று நடிகர் கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தில் அவரின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
வலிமை படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், வலிமை டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்படிருந்தது. இந்த சந்தோசத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடும் முன்பாக அடுத்த ‘லட்டாக’ வலிமை திரைப்படம் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒருவேளை விஜயின் பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானால் நேரடியாக அஜீத் விஜய் படங்கள் மோத வாய்ப்புள்ளது. இது தான் தற்போதைய கோலிவுட்டின் பரப்பு செய்தியாக மாறியுள்ளது