அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் – சந்திக்க இருக்கும் முக்கிய தலைவர்கள்?

Modi-leaves-for-US -speaks-at-UN-General-Assembly

பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Modi-leaves-for-US -speaks-at-UN-General-Assembly
Modi leaves for US speaks at UN General Assembly

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விமானத்தில் இன்று நியூஜோர்க் செல்கிறார். இந்நிலையில் அமெரிக்கா அதிபர், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிரிட்டன் பிரதமர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதோடு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
வரும் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க்கவுள்ள மோடி  ஆப்கானிஸ்தான் விவகாரம், பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள், சீனாவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்திய பிரதமர் விவாதிக்க உள்ளார்.
இதனை அடுத்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட QUAD கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அதன் பின் நியூயார்க் சென்று 25ஆம் தேதி ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

 

Total
0
Shares
Related Posts