பண்ருட்டி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்கூட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு பெண் ஊழியர் சாந்தி காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் .
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் கூடத்தின் மேற்கூரை திடிரென இடிந்து விழுந்தது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது :
பண்ருட்டி அருகே சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்கூட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு பெண் ஊழியர் சாந்தி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது!
அரசு பள்ளிகள் மற்றும் சமையற்கூடங்களின் தரத்தை சரியாக ஆய்வு செய்து பராமரிக்காத அரசு மற்றும் கல்வித்துறையின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம்!
இனிமேலும் அலட்சியம் காட்டாமல் அரசு துரிதமாக செயல்பட்டு பழுதடைந்த நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டிடங்களையும், சமையற்கூடங்களையும் சீர் செய்ய வேண்டும். காயமடைந்த பெண் ஊழியர் சாந்திக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.