அரசு அலுவலகத்தில் மணற் கொள்ளையர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட மறைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் மகன் மார்ஷல் ஏசுவடியான் (VAO Son) தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகி உள்ளார் .
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலகராக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ் .
உண்மைக்கும் நேர்மைக்கும் மட்டும் கட்டுப்பட்டு வந்த லூர்து பிரான்சிஸ் அப்பகுதியில் நடக்கும் மணற் கொள்ளைகளை தடுத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார் .
இதனால் ஆத்திரம் அடைந்த மணற் கொள்ளையர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, பட்டப்பகலில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து லூர்து பிரான்சிஸ் அவர்களை கொடூரமாக வெட்டிக் கொன்றனர் .
அரசு அதிகாரி என்றும் பார்க்காமல் பட்டப்பகலில் அரசு அலுவலகத்திற்குள் கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு மறைந்த லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தில் சிரிப்பு சத்தம் கேட்டுள்ளது .
லூர்து பிரான்சிஸ் மகன் மார்ஷல் ஏசுவடியான் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகி உள்ளது தான் இந்த மகிழ்ச்சி காரணம்
எளிய குடும்பத்தில் பிறந்து, நன்றாக கல்வி பயின்று, அரசுப்பணியில் சேர்ந்து, சமூகப் பொறுப்புணர்வோடும், உண்மையும் நேர்மையோடும் பணிபுரிந்து வந்த தனது தந்தை.
சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டாலும், மணற்கொள்ளையர்கள் மற்றும் கொலை-கொள்ளையில் ஈடுபடும் சமூகவிரோதிகளின் விளைவாலும் அரசுப் பணியிடத்தில் .
Also Read : https://itamiltv.com/promotion-for-policemen-who-have-served-for-20-years/
பணியின்போதே வெட்டி வீழ்த்தப்பட்ட கொடுந்துயரத்தை நெஞ்சில் ஏந்தியபோதும் தன் இலக்கில் இருந்தும், உயிருக்குயிராக நேசித்த தந்தையின் இலட்சியக் கனவில் இருந்தும் சற்றும் விலகாமல்
தன்னம்பிக்கையுடன் படித்து, அரசுத் தேர்வில் (VAO Son) வெற்றிபெற்று, இன்று உரிமையியல் நீதிபதியாகி உள்ளார் மார்ஷல் ஏசுவடியான்
இந்நிலையில் தந்தையை போலயே உண்மைக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என மார்ஷல் ஏசுவடியானுக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.