50 ஆண்டுகளுக்குப் பிறகும் பெரியாரின் பெயரை கேட்டாலே பயப்படுகிறார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிய சாதியப் பாகுபாட்டினைக் கண்டு கொதித்தெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் . மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகிவற்றுக்காக தொடர்ந்து போராடி அதில் வெற்றியும் கண்டார் .
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுத நினைத்த பல தலைவர்களுள் ஒருவரான தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் தந்தை பெரியார் 50ம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது :
50 ஆண்டுகளுக்குப் பிறகும் பெரியாரின் பெயரை கேட்டாலே பயப்படுகிறார்கள் . சுதந்திர நாட்டில் ஒருத்தன் உயர்ந்த ஜாதியாகவும், தாழ்ந்த ஜாதியாகவும் பிறக்கலாமா? என்று கேட்டார் பெரியார். மனிதநேயத்தை போற்றினார்.
மனு தர்ம ஆட்சி வரவேண்டும் என எண்ணுகிறார்கள். நாம் மனித தர்ம ஆட்சியை உருவாக்க நினைக்கிறோம்”
இத்தனை நாட்களுக்கு பிறகும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி நடப்பவர்கள் ஏராளம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.