சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனருமான டாக்டர் பா.ராம மோகன ராவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்டத்திற்கு முதல் குரல் கொடுத்த மாமன்னர் வீரபாண்டி கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாள் விழா ஆர்.எம்.ஆர் பாசறை சார்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனருமான டாக்டர் பா.ராம மோகன ராவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் ஆர்.எம்.ஆர் பாசறை நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு நாயுடு மகா சங்கம் மதுரை மாவட்ட நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்பு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவிக்க வந்த போது முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் பா.ராம மோகன் ராவ் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.