அஜித்குமாரின் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தின் ஓடிடி உரிமத்தை (vidamuyarchi) Netflix நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தடம் , கலகத்தலைவன் ஆகிய படங்களை இயக்கி திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி .
இவரது இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் தான் ‘விடாமுயற்சி’.
லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்க உள்ளார் .
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்படத்தின் ப்ரீ பிரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .
விடாமுயற்சி படத்தின் முழு படப்பிடிப்பையும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடத்தி முடிக்க படக்குழு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது .
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை ஹாலிவுட் தரத்தில் தயாரிக்க படக்குழு முடிவு செய்திருப்பதால் மொத்த படப்பிடிப்பையும் அஜர்பைஜான் நாட்டிலேயே எடுக்கப்பட்டு வருகிறது.
அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்தார் என்ற செய்தி பார்த்தோம்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்துடன் அவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதால் அந்த அப்படத்தில் அவர் இருப்பது உயர்த்தி என்றே கூறப்படுகிறது .
வேற லெவலில் உருவாகி வரும் இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் ஏதேனும் அப்டேட் உள்ளதா என ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்தனர்.

இப்படி இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு தற்போது சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/captain-miller-conducts-the-collection-hunt/
அந்த அப்டேட் என்னவென்றால் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி, திரைக்கு வந்த பிறகு நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
(vidamuyarchi) தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் கோலாகலமாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
