அஜித் நடிப்பில் முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவான விடாமுயற்சி திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் . ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் கார் பந்தயம் என இரண்டிலும் அசத்தி வரும் வரும் இவரது நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
அந்தவகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்,ஆரவ்,அர்ஜுன் , திரிஷா ,ரெஜினா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.
Also Read : வீட்டிலேயே கஞ்சா வளர்த்து புகைவிட்ட வாலிபர்கள் கைது..!!
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் டீசண்டான வரவேற்பை பெற்ற இப்படத்தின் ott உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்த நிலையில் தற்போது இப்படம் ott ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இப்படம் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.