DNT ஒற்றை சான்றிதழ் வழங்க கோரி விடுதலைக்களம் கட்சி சார்பில் சென்னை கோட்டையை நோக்கி நடைபெற்ற பேரணியில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
டி.என்.டி.ஒற்றை ஜாதி சான்றிதழை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் டி.என்.டி, கல்வி, பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட தனி அலுவலரை நியமித்திட வேண்டும்.தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின் தான் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது டி.என்.டி. சமுதாய மக்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்குவேன் என்று அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்றது
பேரணி சென்னையை அடுத்த நீலங்கரையை நெருங்கும் போது பேரணியில் ஈடுபட்ட விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் விடுதலைக்களம் கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.