வியட்நாமில், பச்சை ரத்தம், சமைத்த இறைச்சி ஆகியவற்றை சாப்பிட்ட பெண்ணின் தோலுக்குள் புழுக்கள் (worms in skin) நெளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் உள்ள அன் பின்ஹ் என்ற பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹனோய் என்ற பெண் ஒருவர் அவரது வீட்டில் இறைச்சியை சமைத்துள்ளார். அப்போது, பச்சை ரத்தத்தை கொண்டு புட்டிங் மாதிரியான ‘டைட் கேன்’ என்ற உள்ளூர் உணவு ஒன்றை ஹனோய் தயாரித்துள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் தான் சமைத்த அந்த உணவை முழுமையாக சாப்பிட்டுள்ளார். அதனை சாப்பிட்ட பின்னர் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹனோய் தாங்க முடியாத தலைவலியால் டான் வான் ங்கு என்ற மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது தான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த பெண்ணிற்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டில், அவருடைய உடலில் சில இடங்களில் புழுக்கள் (worms in skin) உருவாகி நெளிந்து கொண்டிருப்பது தெரியவந்தது.
அவரின் உடலில் கை, கால்கள் மற்றும் தோலுக்கு கீழேயும் புழுக்கள் நெளிந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், அவருடைய மூளையை கூட புழுக்கள் விட்டு வைக்காமல் குழுமியிருந்தன. இந்த மோசமான நிலையில், அவர் கொஞ்சம் தாமதித்திருந்தாலும் கூட அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தற்போது அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவரருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு சமைக்காத பச்சை ரத்தத்தை சாப்பிட்டதே என பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
எனவே, அசைவ உணவுகளை சுத்தமாக சமைத்து உண்ணுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.