இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களைக் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றி நடைபோட்டு கொண்டிருந்த விஜய் ஆண்டனி சில ஆண்டுகளாக ஹீரோவாகவும் கலக்கி வருகிறார் . இந்நிலையில் இவர் அன்புமகள் மீரா மன அழுத்தம் காரணமாக வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
12 ஆம் வகுப்பு படித்து வந்த மீரா , சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில் கடத்த19 ஆம் தேதி அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் . மீராவின் இந்த முடிவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்றும், சமூக வலைதளங்களிலும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது :
அன்பு நெஞ்ஜங்களே,
என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள்.
அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். என நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமாக தெரிவித்துள்ளார் .