மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் அபாயம் ”தமிழ்நாடா? வடநாடா? விழித்துக்கொள் தமிழா..” ஒட்டபட்ட போஸ்டர்களால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் கூட்டமாகச் சேர்ந்து தமிழக தொழிலாளரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனுபுரபாளையம், ஆத்து பாளையம், திருமுருகன் பூண்டி, வேலம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏராளமான பின்னல் ஆடை நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் ஒடிசா, ஜார்கண்ட், குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அனுப்பர்பாளையம், கேளப்பாளையம், செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பணியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழக தொழிலாளர்களை விரட்டி விரட்டி,கட்டையால் தாக்கும் video காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சின்னத்திரை காமெடி நடிகர் மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் வடமாநில இளைஞர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் தமிழக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் அகில இந்திய சங்குதேவன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பில் மதுரை முழுவதும் அபாயம் ”தமிழ்நாடா? வடநாடா? விழித்துக்கொள் தமிழா..” என போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநில இளைஞர்களின் வருகை தமிழகத்தில் அதிகரிப்பதால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளது.