விழுப்புரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த கூட்டுறவு கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கத்தில் இயங்கி வரும் தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது திடீரென வயல்வெளியில் இறங்கிய தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் விவசாயத்தில் பார்த்தினிய செடிகள் பயிர்களை வளரவிடாமல் அழிப்பதில் முக்கிய பங்காற்றுவதால், பார்த்தினிய செடிகள் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
இந்த நிலையில் நானும் ஒரு விவசாயி குடும்பம் தான் என கூறி பார்த்தினிய செடிகளை களையெடுத்தார். அவரின் இந்த செயல் அப்பகுதியில் இருந்து விவசாயிகளையும் பொது மக்களையும் நெகிழ்ச்சியில் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
தமிழகத்தில் தேவைக்கேற்ப 3500 நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக முதலமைச்சர் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளதாகவும், கூட்டுறவு வங்கி கடன் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் வழங்கவும் மேலும் மாவட்ட முழுவதும் 13 லட்சம் விவசாயிகள் பயன்பெற வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மட்டும் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளதாகவும், தேசிய திட்டத்தில் 1.14 குடும்ப அட்டைகளும், மீதமுள்ள 1.04 கோடி அட்டைகள் உள்ளதாகவும், 2.64 லட்சம் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் 14.54 லட்சம் குடும்ப அட்டைகள் பெற விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர்,தமிழகத்தில் இதுவரை நடந்த ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 15278 பேர் 11,166 வழக்குகள் போடப்பட்டு கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.