இந்திய அளவில் 2024-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில், பிரபலங்கள் பிரிவில் முன்னாள் மல்யுத்த வீராங்கனையும், எம்.பி-யுமான வினேஷ் போகத் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் எடை அதிகரிப்பு காரணமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலை சந்தித்தார்.
Also Read : CUET தேர்வுமுறை மாற்றி அமைப்பு – யூஜிசி தலைவர் தகவல்..!!
இதையடுத்து அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் நடைபெற்ற எம்.பி தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று தற்போது எம்.பியாக வலம் வருகிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற சர்ச்சையின் போதே பலரால் இணையத்தில் தேடப்பட்ட நபராக வலம் வந்த வினேஷ் போகத் தற்போது இந்திய அளவில் 2024-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில், பிரபலங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளதில் எந்த ஆச்சிரியமும் இல்லை என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.