தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்பட ஆம்னி பேருந்துகளில் 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறி செயல்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி நேற்று கோலாகலமாக கொண்டாடபட்டது.
இதில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆசைப்பட்ட மக்கள் ரயில்கள் . பேருந்துகள், பல வாகனங்களில் முண்டியடித்து சென்றனர் அவற்றில் பலர் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்துகளில் சென்றனர் .
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான விதிமீறல்களில் ஈடுபட்ட 1,223 பேருந்துகளுக்கு 18,76,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இதுமட்டுமல்லாமல் முறையாக வரி செலுத்தாத ஆம்னி உரிமையாளர்களிடம் இருந்து 11,25,180 வரி வசூல் செய்தும் விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.