தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். இதுமட்டுமல்லாமல் விஜ்ய மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்களை ஒன்றிணைத்து ஏழை எளிய மக்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பல உதவிகளை அவர் செய்து வருகிறார் . இவையனைத்துணையும் வைத்து பார்க்கும்போது தளபதி விஜய் விரைவில் கால் தடம் பதிக்க போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இதன் முன்னோட்டமாக தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து விருதுகள் , ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கியுள்ளார் .
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், ஒரு தொகுதியில் மக்களின் வாக்குக்ளை பெற சுமார் 15 கோடி செலவு செய்தால் அதற்கு முன்பு அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்? என்றும் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் காசு வாங்காமல் ஓட்டுபோட பெற்றோரிடம் தெரிவியுங்கள் என்றும் மாணவ மாணவிகள் முன் பேசியிருந்தார்.
இதனையடுத்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கிய நடிகர் விஜய், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நேற்று காலையில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது .
தேர்வு செய்யப்பட்ட 1150 பள்ளி மாணவர்களுக்கு விருதுகளை தனது கைப்பட 10 மணி நேரத்திற்கும் மேலாக கால் கடுக்க நின்று விஜய் கொடுத்துள்ளார் . இதனால் மேடையில் தளபதி மிகவும் சோர்ந்துபோய் மேஜையில் சாய்ந்தபடி நின்றுள்ளார் .
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.