இங்கிலாந்தின் பிரதமர் (uks pm), பாதுகாப்புச் சீருடை அணிந்த ஆண்கள் மற்றும் பிற அதிகாரிகள் வரிசையாக அமர்ந்து பொங்கல், அரிசி, வெல்லம் மற்றும் பாலில் செய்யப்பட்ட இனிப்புப் பொங்கலை ருசித்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்தில் உள்ள பிரதமர் (uks pm) அலுவலக ஊழியர்கள் அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் போது சுவையான இனிப்புப் பொங்கலை ருசிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Viral Video of UK defense & PM's office staff celebrating Pongal/Makar Sankranti festival.
A welcome change 🇮🇳 pic.twitter.com/CZXAjSxZLy
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 17, 2023
அந்த வீடியோவில், வாழை இலையில் பரிமாறப்பட்ட இட்லி, சட்னி மற்றும் வாழைப்பழங்களுடன் சாப்பிட்டு மகிழ்கிறார்கள். மேலும், முண்டு மற்றும் சட்டை அணிந்த ஒரு நபர் அவர்களிடம் இன்னும் ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறார்.
மேலும், அதிகாரிகளில் ஒருவர் சாப்பிட்டுவிட்டு “மிகவும் நன்றாக இருக்கிறது” என்று சொல்வது கேட்கப்படுகிறது. அவர்களில், சிலர் ஸ்பூன்களைப் பயன்படுத்தி உணவை சாப்பிடுவதைக் காணலாம், மற்றவர்கள் தங்கள் கைகளால் சாப்பிட்டார்கள்.
இங்கிலாந்து பாதுகாப்பு மற்றும் பிரதமரின் அலுவலக ஊழியர்கள் பொங்கல் (மகர சங்கராந்தி) பண்டிகையை கொண்டாடும் வீடியோவை ட்விட்டர் பயனாளர் மேக் அப்டேட்ஸ் பகிர்ந்த நிலையில், ட்விட்டரில் வைரலாகி 68,000 பார்வைகளைக் குவித்துள்ளது.