நேற்று நடந்து முடிந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி ஆப்கான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் கோலியின் அதிரடியால் இந்திய அணி 212 ரன்கள் குவித்து. பவுலிங்கில் புவனேஷ்வர் குமார் தனது சிறந்த பந்து வீச்சை நேற்று அரங்கேற்றினார். அவர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கேட்களை சாய்தார் மேலும் ஒரு ஓவரில் ரன் ஏதும் குடுக்காமல் மெய்டின் செய்தார்.
அதிரடி காட்டிய கோலி மிரட்டலாக 122 ரன்கள் சேர்தார். 2 ஆண்டுகளுக்கு மேலாக கோலி ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் அனைவரின் காத்திருப்பு நேற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் சதம் அடித்த கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 71 வது சதத்தை நிறைவு செய்தார்.
இந்த சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச t20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் குப்தில்லை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார். இதுவரை 100 t20 போட்டியில் விளையாடிவுள்ள கோலி 3584 ரன்களும், 32 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.
இந்த போட்டியில் அவர் அடித்த சதம் தான் t20 போட்டியில் முதன்முதலாக அடித்த சதமாகும். மேலும் இதுவரை 100 சிக்சர்களை t20 களில் அடித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், t20 என மூன்று விதமான போட்டியிலும் சதம் அடித்துள்ளார் விராட் கோலி. இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை கோலியையே சாரும் ( மொத்தமாக 276 ரன்கள் ).
சர்வதேச t20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்ட்ரேலியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் கோலி மீண்டும் நல்ல பேட்டிங் ஃபாம்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கபடுக்கிறது.