vishwa hindu parishad | சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும்,விஷ்வ இந்து பரிஷத்தின் தென் தமிழகத் தலைவருமான V. கதிர்வேல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து
தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்ட சம்பவம் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக- பாஜக இரு மாபெரும் கட்சிகள் கடந்த 5 வருடங்களாக கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து இந்த இரண்டு கட்சிகளும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.

ஆனால் இரண்டு தேர்தல்களிலும் தோல்வியை கிடைத்தது.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோடு அதிமுக தலைவர்கள் மோதல் போக்கை தொடர்ந்தது.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி கொண்டது.
இதையும் படிங்க: “Butterfly Butterfly”.. “Apple Apple” வைரல் பாடல்கள் எப்படி உருவானது தெரியுமா?
இதனையடுத்து இரண்டு கட்சிகளும் தங்கள் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளோடு ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் தான் பாஜகவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிமுகவில் இணைய தொடங்கினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் 15 பேரை பாஜக தங்கள் அணிக்கு இழுத்து அதிரடி காட்டியது.
இதற்கு போட்டியாக பாஜகவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினராக இருந்த வந்த நடிகை கவுதமி திடீரென அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இணைந்தார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1759843970182750589?s=20
இதனை தொடர்ந்து பாஜகவின் தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலியும் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில்,
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் V. கதிர்வேல் நேரில் சந்தித்து, விஷ்வ இந்து பரிஷத்தின் (vishwa hindu parishad) தென் தமிழகத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு,
தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.இந்த சம்பவம் பாஜகவினர் இடையே அதிக்கியை ஏற்ப்படுத்தி உள்ளது.