பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் வி.ஜே மணிமேகலை விபத்தில் சிக்கி உள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் கோமாளியாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் தான் மணிமேகலை தனது குறும்புத்தனத்தாலும் நகைச்சுவை கலந்த பேச்சாலும் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் .
வெள்ளித்திரையில் உதவி நடன இயக்குநராக பணியாற்றிய ஹூசைன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மணிமேகலை தற்போது அவரது சொந்த ஊரில் அழகிய வீடு ஒன்றை ஆசை ஆசையாக கட்டி வருகிறார்.
இந்நிலையில் அங்கும் இங்கும் துள்ளி குதித்து விளையாட்டு தனமாக இருக்கும் மணிமேகலை தற்போது தரையில் வழுக்கி விழுந்து பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது :
“ கீழே விழுந்து காலில் பலத்த அடிப்பட்டுவிட்டது, எழக்கூட முடியவில்லை” என பதிவிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் என மணிமேகலை கொஞ்சம் பார்த்து கவனமாக இருங்கள் என அறிவுரை கூறியும் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர் .