மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளில் பலத்த போலீஸ் மற்றும் பாதுக்காப்பு படையின் பாதுகாப்புடன் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
சத்தீஸ்காரில் ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் நக்சலைட் அமைப்பினரின் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்புடன் இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாத (டிசம்பர்) 3ம் தேதி எண்ணப்படுகிறது .
இந்நிலையில் இந்த தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள், ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்புகிறேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.