இஸ்ரேல் மீது தற்போது நடத்திய தாக்குதல் சிறிய தண்டனைதான் தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் முக்கியத் தளபதிகள் மீது குண்டு வீசி இஸ்ரேல் ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, கடந்த திங்கள் இரவு 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது .
இதன்காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவில் வரும் நிலையில் இரு நாடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Also Read : இது கடைசி படமா..? விஜய் சொல்வதை தண்ணீல தான் எழுதணும் – தமிழிசை சவுந்தரராஜன்
இஸ்ரேல் மீது தற்போது நடத்திய தாக்குதல் சிறிய தண்டனைதான் தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொண்ட பேசிய ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா கொமேனி கூறியதாவது :
தங்களது நிலத்தை ஆக்கிரமித்து தங்களின் வாழ்வை நாசப்படுத்தியவர்களுக்கு எதிராக போராடும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உண்டு; பாலஸ்தீனர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு உதவுவதும் நியாயமானது.
அந்த வகையில் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நியாயமானது; தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் தற்போது நடத்திய தாக்குதல் என்பது சிறிய தண்டனைதான் என ஆயத்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.