நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி திராவிட மாடல் ஆட்சியை மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி பலிக்காது. நாங்கள் எப்போதும் “மோடிக்கும் பயப்படமாட்டோம், EDக்கும் பயப்பட மாட்டோம்” என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை ஆரிய மாடலாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி என்றும் பலிக்காது. பிரதமர் மோடி விமானி இல்லாமல் கூட செல்வார் ஆனால் அதானி இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார்.
தமிழகத்தில் ED Raid எப்படி செல்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ED Raid ரொம்ப ஜாலியாக தான் போய்க்கொண்டிருக்கிறது . நாங்கள் எப்போதும் மோடிக்கும் பயப்படமாட்டோம், EDக்கும் பயப்பட மாட்டோம் என தெரிவித்தார்.
இல்லம் தேடி மருத்துவ திட்டம் உள்பட மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு போன்றவை 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் வேதனை விளக்க திட்டங்களாக உள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார் .