கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம், காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு தினசரி வழங்கும் உதவி தொகை உயர்த்தப்பட்டு உள்ளது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மீனவர்கள் நல மாநாட்டில் பங்கேற்று மீனவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 10 அறிவிப்புகள்..
01. மீனவர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5,035 பேருக்கு பட்டா வழங்கப்படும்.
02. 45,000 மீனவர்களுக்கு மீன்பிடி கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
03. மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை, ரூ.5000-ல் இருந்து ரூ.8000-ஆக உயர்த்தப்படும். 60 வயதானவர்களுக்கு மீன்பிடி நிவாரணத்தொகை வழங்கப்படும்.
04. குமரி, நெல்லை, தூத்துக்குடி நாட்டுபடகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 3,700 லிட்டராக உயர்த்தப்படும்.
05. விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
06. நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 4,000-ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தப்படும்.
07. தங்கச்சிமடம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் பாம்பனில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்கப்படும்.
08. மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படும்.
09. மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அலகு தொகை, ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
10. 1000 நாட்டு படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும். புதிய திட்டங்களுக்காக ரூ.926 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.