இந்திய பளு தூக்கும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வீரர்கள் தினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், மத்திய அமைச்சருமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டதால் குண்டு கட்டாக அகற்றப்பட்டனர். மேலும் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் நேற்று அறிவித்தனர். பின்னர் அது திரும்ப பெறப்பட்டு மத்திய அரசுக்கு மேலும் ஐந்து நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிஜ் புஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் பாரப்பட்சம் இன்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரிஜ் பூசனுக்கு ஆதரவாக அயோத்தியை சேர்ந்த பண்டிதர்கள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது.
போக்சோ சட்டத்தில் பல ஓட்டைகள் மற்றும் குறைபாடு உள்ள உட்பிரிவுகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருங்கிய கூட்டாளியும், தனிப்பட்ட உதவியாளருமான சுபாஷ் சிங், நாட்டின் மூத்த துறவிகள் மற்றும் ஞானிகளின் அழைப்பின் பேரில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஹரிதுவார்,காசி , மதுரா மற்றும் நாட்டின் பிற புனித ஸ்தலங்க
ளில் இருந்தும் ஏராளமான பிராமணர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.