கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், இறந்தவர்களுடன் தன்னால் பேச முடியும் என்று கூறி திகில் கிளப்பியிருகிறார்.
பொதுவாக பல நூற்றாண்டுகளாகவே மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது உலகில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்றாக உள்ளது. எனவே மரணத்திற்குப் பிறகான வாழ்க்கை குறித்து பல ஆராய்ச்சியார்களால் பல நூற்றாண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையயில், சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் எமிலி டெக்ஸ்டர் என்ற 31 வயதான பெண் ஒருவர், இறந்தவர்களுடன் தன்னால் பேச முடியும் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அந்நாட்டின் ஊடகத்திற்கு பேட்டியளித்த எமிலி டெக்ஸ்டர்..
“ஒருவர் இறந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட ஆன்மீக இடத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியும். அதாவது, தங்கள் இறந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அவர்கள் இருப்பார்கள். இப்படி அந்த இடத்தில் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை அவர்கள் இருப்பார்கள்.
அதன் பின்னர், அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வார்கள். அங்கு மனிதர்களாக இருந்தபோது நமக்கு ஏற்பட்ட அனைத்து சிரமங்களையும் சமாளிக்க வேண்டும். இந்த இடத்தின் கால அளவு வாரங்களில் இருந்து மாதங்கள் வரை மாறுபடும். இங்கு அவர்கள் தங்கள் கர்மாவுடன் நேருக்கு நேர் வந்து தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
தொடர்ந்து ஆன்மா ஒரு புதிய சீர்திருத்த பாதையில் நடக்கத் தொடங்கும். அப்போது நெருங்கிய நண்பரோ, உறவினரோ அந்த ஆன்மாக்களை வழிநடத்துகிறார்கள். இதற்குப் பிறகு, ஆத்மா மற்றொரு உடலை எடுத்து ஒரு புதிய வாழ்க்கையை வாழ தொடங்குகிறது.” என்று கூறியுள்ளார்.
மேலும், எமிலி சிறுவயதில் காட்டிற்குள் விளையாடும் போது இறந்தவர்களுடன் பேசியிருப்பதாகவும், சில நேரங்களில் இறந்த தந்து உறவினர்களை தன் வீட்டில் பார்த்ததாகவும் அவர் கூறுகிறார். இந்நிலையில், இதனை முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட எமிலி டெக்ஸ்டர் தன்னுடைய 8-வது வயதில் தான் தனக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
மேலும் எனது 20வது வயதில் எனக்கு இருக்கும் இந்த சக்திகளை ஏற்றுக்கொண்டேன். அன்று முதல் நான் இறந்தவர்களுடன் பேசி வருகிறேன்” என்று கூறி திகில் கிளப்பியுள்ளார் எமிலி..