இந்திய ராணுவ வீரர்கள் ‘அக்னிபாத்’ திட்டத்தின் மூலம் சேரும் அனைவரும் 25% இளைஞர்கள் நிரந்தரமாக வேளையில் சேர்க்கப்படுவார்கள்.இதில் சேர்க்கப்படும் 100ல் 25 பேருக்கு முழுநேர சேவைக்கான வாய்ப்பு கிடைக்கும்.இந்த திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று பாதுகாப்பு தரை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
4 வருடப் பயிற்சிக்குப் பிறகு முழு தேர்ச்சியுடன் இருக்கும் 25 %வீரர்கள் அக்னி வீரர் என்று அழைக்கப்படுவர் என்றும் இந்த திட்டத்தால் 4 ஆண்டுகளுக்கு சுமார் 45000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்று கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த திட்டம் அடுத்த 90 நாட்களுக்குள் செய்யப்படுத்திக்ப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதில் சேர ஆர்வம் உள்ளவர்கள், வழக்கமான ஆட்சேர்ப்புக்கு தாமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம்.அக்னிபாத் திட்டம், எல்லா அக்னி வீரர்களுக்கும் மாதம் 30,000 ரூபாய் மற்றும் நான்காவது ஆண்டில் மாதத்திற்கு 40,000 ரூபாய் வரை நல்ல மாத ஊதியத்தை வழங்கும். நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தபிறகு இதில் சேர்ந்த அனைவருக்கும், ‘சேவா நிதி’ என்ற ஒட்டுமொத்த நிதி பேக்கேஜூம் உள்ளது,” என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் இந்திய ராணுவம் உலகத் தரம் வாய்ந்த ராணுவமாக மாற்ற அக்னிபாத் திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று பாதுகாப்பு தரை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்