சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காலை உணவாக உள்ள ஓட்ஸ் (Oats) குறித்து தெரிந்துகொள்வோம்
தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களில் பல ற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்றே சொல்லலாம். பீட்சா, பர்கர், தந்தூரி சிக்கன் என இப்போதுள்ள இளம் தலை முறையினருக்கு பிடித்த உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே சொல்கிறது.
இதனால் உடல் ஆரோக்கியம் கேள்விக் குறியாகி உடல் உபாதைகளும் ஏற்பட காரணமாகி விடுகிறது.
இதனால் பச்சைக் காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, மற்றும் தானியங்கள் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஓட்ஸ் (Oats) குறித்து தெரிந்து கொள்வோம்.
உடல் ஊட்டச்சத்தை பொறுத்தவரை ஓட்ஸ் ஒரு முக்கியமான உணவாகும். இது ஒரு வகையான தானியமாகும்.
இதில் நார்ச்சத்து மட்டுமின்றி உடலுக்குத் தேவையான சத்துக்களும் உள்ளன. பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் பி1 உடன் இணை கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன.
ஆற்றல் உற்பத்தி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாடு போன்ற உடல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
பலர் தங்கள் அன்றாட உணவில் ஓட்ஸை சேர்த்துக்கொள்கின்றனர். எடை இழப்பிற்கு முயற்சிப்பவர்கள் கூட ஓட்ஸ் சாப்பிடுகின்றனர்.
இதையும் படிங்க : Director Arunraja Kamaraj இயக்கத்தில் விஷ்ணு விஷால்
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது நல்லது ஆகும். இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கான் செரிமான ஆரோக்கியத்தில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைத் தடுக்கலாம்.
இதில் உள்ள நார்ச்சத்து ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது. குடல் பாக்டீரியாக்களைப் பாதுகாக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த காலை உணவாகும். ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுக்கிறது. நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
ஓட்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
சாதாரணமாகவே ஓட்ஸ் ஒரு சத்தான உணவாக பார்க்கப்படுவதாலும் அது சுவையான உணவாக இருப்பதாலும் அதிக மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக ஓட்ஸ் உள்ளது.