வாட்ஸ் அப் பில் கொட்டப்போகிறது பணம் – வர இருக்கும் புதிய சலுகை

whatsapp-action-cash-back-if-money-is-sent
whatsapp action cash back if money is sent

வாட்ஸ் அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளை தர வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஸ்மார்ட்போனில் பெரும்பாலானோர் ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் வாட்ஸ் அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் இந்த வசதி சோதனை அடிப்படையில் நிறைய பேருக்கு சமீபத்தில் வந்துள்ளது. இதன் மூலம், வாட்ஸ்அப்பில் உள்ளவர்களுக்கு மிகச் சுலபமாக பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.

whatsapp-action-cash-back-if-money-is-sent
whatsapp action cash back if money is sent

ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மகிந்திரா உள்ளிட்ட பல வங்கிகள் இந்த வசதியை வழங்குகிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில், வாட்ஸ் அப்பில் மேலும் ஒரு அப்டேட் வரவிருக்கிறது.
அதாவது, வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்பியவர்களுக்கு கேஷ் பேக் கிடைக்கும் என்றும் இந்த வசதி விரைவில் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் ஆயிரக்கணக்கில் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதற்குப் போட்டியாக வாட்ஸ்அப் பே வசதியிலும் கேஷ்பேக் சலுகைகளை தர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Total
0
Shares
Related Posts