உள்நாட்டில் வெடித்த போராட்டங்களால் தனது பதவியை ராஜினாமா செய்து வெளிநாட்டிற்கு சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது.
வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்ற நிலையில், அந்நாட்டில் பிரதமராக ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவே போராட்டக் குழுவினரின் முக்கியமான கோரிக்கையாக இருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தனது நாட்டை விட்டு வெளியேறினார்.
Also Read : மாணவர்கள் மோதலில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!
இதையடுத்து இந்தியா சென்ற ஷேக் ஹசீனா அங்கிருந்து எங்கு சென்றார் என்ற தகவல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது.
இந்நிலையில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் தொஹித் ஹொசைன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஐக்கிய அமீர அரசிடம் இதுகுறித்து கேட்டதாகவும், உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் தொஹித் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பு கருதி அவரின் இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.