தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்தித்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறியதாவது :
எனது பிறந்தநாளான இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசினேன். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வரிடம் கோரிக்கை வைத்ததுடன் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு பற்றி விரைவில் ஆலோசித்து நல்ல முடிவை எடுக்கவும் வலியுறுத்தினேன் .
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக யாரும் பார்க்கக்கூடாது . தமிழக அரசுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை கொண்டு வர மனமிருக்கிறதா என்று தெரியவில்லை . நடப்பு கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வர வலியுறுத்தினோம்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல போராட்டங்களையும் நடத்தியுள்ளோம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.