நெல்லையில் நேற்று மாயாண்டி என்ற இளைஞர் நீதிமன்ற வாயிலில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தை உலுக்கிய இந்த கொலைவழக்கில் கொலை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்துள்ள நிலையில் நெல்லை நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏன் கொலையை தடுக்கவில்லை? என் நீதிபத்திகளை கேள்வி எழுப்பினர்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது . நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஒரு குற்றவாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர் என காவல்துறையினர் பதில் கொடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட நீதிமன்றங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.