ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதா? என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதே போல் பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார் .