பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நேற்று கைதான நிலையில் அவரது முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் கைது செய்ய என்ன அவசரம்?. இது அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.