தனியார் ஆய்வகங்கள் கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. மேலும் இந்த வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை அச்சத்தி ஆழ்த்தியது. இதனை அடுத்து பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக கொரோன வைரஸ் குறைவடைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் உலக முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை மிக மோசமாக வீச தொடங்கி உள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் ஆய்வகங்கள் கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தனியார் ஆய்வகங்கள் கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தனியார் ஆய்வகங்களில் வெளியாகும் முடிவுகளின் தரவுகளை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும், என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 400 ரூபாயும், காப்பீடு திட்டம் அற்றவர்களுக்கு 700 ரூபாயும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய், என கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தனியார் ஆய்வகங்கள் அரசு குறிப்பிட்டுள்ள இந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.