தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த போவதாக மின் வாரியம் (Electricity bill)முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் கட்டணத்தை (Electricity bill)உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்து அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து,கடந்த செப்டம்பர் மாதம் வீடுகள் மற்றும் தொழிற்சாலை களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 %முதல் 52 %வரை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில்,மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் வெளியாகி உள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், வரும் 2026-27ஆம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.அதன்படி 4% முதல் 7% வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்,மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.ஜூலை முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.