ஒமிக்ரான் பரவல் காரணமாக புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணிக்கு இன்று இரவு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கூடுவதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட மற்றுமொறு புதிய வகை கொரோனாவன ஒமைக்ரான் வைரஸ் 100 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், உருமாறிய ஒமிக்ரான் மேலும் பரவாமல் இருக்கவும் தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது.
அத்துடன் புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணியில் இருந்து ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒமிக்ரான் பரவல் காரணமாக புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணிக்கு இன்று இரவு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கூடுவதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.