இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 3 டோஸ் செலுத்துவது குறித்து அடுத்த வாரம் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவது கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 3வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால், யாருக்கெல்லாம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்க தடுப்பூசிக்கான தேசிய தொழிநுட்பக்குழுவின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
அந்த கூட்டத்தில் தற்போதய கொரோனா நிலவரம், தடுப்பூசிகள் உற்பத்தி, கையிருப்பு, தடுப்பூசியின் செயல்திறன் கால அளவு, பல்வேறு தரப்பின் பரிந்துரைகள் மற்றும் வெளிநாடுகளின் அனுபவங்கள் என்று அணைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு 3வது தவணை தடுப்பூசி குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை 3வது டோஸாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த அந்நாட்டு அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.