விமான நிலையத்தில் வீசப்பட்ட அசாம் பயணியின் சடலம்!

the-body-of-a-north-indian-worker-thrown-on-the-road-airport
the body of a north indian worker thrown on the road airport

சென்னை விமான நிலையத்தில் இறந்த அசாம் பயணியின் உடல் சாலை ஓரத்தில் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் கட்டிடத் தொழில் செய்து வந்தவர் ஆசாம் மாநிலத்தைச் சேந்த தீபக் பால். கடந்த இரண்டாண்டுகளாக சென்னையில் வேலை செய்து வந்த இவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ளார்.

அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ஆம்புலன் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே, அவர் உயிரிழந்தார். இதனால் மீண்டும் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், சென்னை உள் நாட்டு விமான முனையத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் போடப்பட்டது.அவருடைய உடலை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருந்தனர். எனினும் சுமார் அரைமணி நேரம் அவருடைய உடல் மழையில் நனைந்தபடி கிடந்தது.

the-body-of-a-north-indian-worker-thrown-on-the-road-airport
the body of a north indian worker thrown on the road airport

விமானத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் தீபக் பால் உடலை மீட்ட மீனம்பாக்கம் காவல் துறையினர் பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீபக் பாலுக்கு ஏற்கனவே வலிப்பு ஏற்பட்ட நிலையில் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts