தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழக அரசு மின் கட்டணத்தை ஜூலை 1 முதல் உயர்த்தி அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மின் கட்டணம் உயர்ந்தால் விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தான்.
Also Read : அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ள முதல் நகரமாக பாலிதானா அறிவிப்பு..!!
இப்படி உயர்த்தப்பட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் மற்றும் தொழில் துறையும் நலிவடையும்.
எனவே தமிழக அரசின் மின் கட்டண உயர்வு பற்றியஅறிவிப்பானது மக்களின் மன நிலைக்கு எதிரானது.
தமிழகத்தில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றும் விதமாக தி.மு.க ஆட்சி செய்வது தான் திராவிட மாடல்.
ஏற்கனவே சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என்று மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசின் திராவிட மாடல் மீண்டும் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்கள் மீது மீண்டும் பொருளாதார சுமையை ஏற்றும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.