கர்நாடக மாநிலம்(karnataka) முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் (congress) ஆட்சிக்கு வந்தால், மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2,000 அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்,வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் போன்ற ஏராளமான வாக்குறுதிகள் அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் பெங்களூர் மைசூருவில் பெண்களுக்கு மாதம் ₹2,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் (கிரகலட்சுமி திட்டம்)தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, பயனாளிகளின் வங்கிக்கணக்குகளுக்கு, டேப்லட் உதவியுடன் பணத்தை நேரடியாக வங்கிக்கணக்குகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
அந்தியோதியா, பிபிஎல், ஏபிஎல் ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப பெண்களுக்கு க்ருக லட்சுமி திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
அரசு ஊழியராக இருக்கும் பெண்கள் இதில் பயன்பெற முடியாது. மேலும், கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படுகிறது. சுமார் ஒரு கோடி மகளிர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.