வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், அங்கு நடைபெற இருந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை உருவானது .
இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்த நிலையில் ஐ.சி.சியின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.
இந்த நிலையில் வங்காளதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
UAE-ல் துபாய், ஷார்ஜா ஆகிய 2 இடங்களில் அக்.3 முதல் 20-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும், வங்கதேச கிரிக்கெட் வாரியமே தொடரை நடத்தும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.